மாடுகள் கட்டும் இடமான நூலக கட்டடம்

Added : நவ 28, 2019
Advertisement

இளையான்குடி : இளையான்குடி ஒன்றியம் முனைவென்றி ஊராட்சியில் உள்ள நுாலக கட்டடம் மாடுகள் கட்டும் இடமாக மாறி வருகிறது.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முனைவென்றி நுாலக கட்டடம் மூடி கிடப்பதினால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நுாலக கட்டடத்தை ஒட்டி சிலர் மாடுகளை கட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். முனைவென்றி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் போட்டித்தேர்வுகளுக்காக பல்வேறு புத்தகங்களை படிக்க இந்த பகுதியில் நுாலகம் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆகவே முனைவென்றி நுாலக கட்டடத்தை உடனே திறக்க வேண்டுமென்று அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X