பொது செய்தி

தமிழ்நாடு

மூத்தோர் தடகளப்போட்டியில்வென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

Added : நவ 28, 2019
Share
Advertisement
ராமநாதபுரம் : திருச்சியில் நடந்த மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில் வென்ற ஆசிரியர்களை ராமநாதபுரம் மூத்தோர் தடகள சங்கம் சார்பில் பாராட்டினர்.கடந்த நவ.,15 முதல் 17 வரை மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பரமக்குடி பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை மரிய

ராமநாதபுரம் : திருச்சியில் நடந்த மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில் வென்ற ஆசிரியர்களை ராமநாதபுரம் மூத்தோர் தடகள சங்கம் சார்பில் பாராட்டினர்.

கடந்த நவ.,15 முதல் 17 வரை மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பரமக்குடி பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை மரிய ஆக்னஸ் 400 மீ., தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் நீளம் தாண்டுதலில் பாலசரவணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் மணிப்பூர் மாநிலத்தில் பிப்.,9 முதல் 14 வரை நடக்கவுள்ள 41வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆசிரியர்களை ராமநாதபுரம் மூத்தோர் தடகள சங்கத்தலைவர் பாலன் கிறிஸ்டியன், செயலாளர் சிவபாலன் சுந்தர், பொருளாளர் பால சரவணன் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X