பொது செய்தி

தமிழ்நாடு

இடையூறாக யார் இருந்தாலும் தூக்குங்க: மாநகர போலீசாருக்கு உத்தரவு

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019
Advertisement
இடையூறாக யார் இருந்தாலும் தூக்குங்க: மாநகர போலீசாருக்கு உத்தரவு

கோவை : கோவை நகர் பகுதியில், ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு யாரும் இடையூறாக இருக்கக் கூடாது; பொருட்கள் விற்பவர்கள், பிச்சை எடுப்பவர்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்க, மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், சிக்னல்களின் அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களையும், அகற்ற போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகரில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், மாநகரின் பெரும்பாலான பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உக்கடம் மற்றும் திருச்சி ரோடு மேம்பால கட்டுமான பணி நடந்து வருவதால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.போக்குவரத்து போலீசாருக்கு, உதவியாக சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீசாரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் வேறு!இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மாநகரின் அனைத்து சிக்னல்களிலும், வடமாநில நபர்கள் பொம்மை விற்பனை செய்வது, பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. வாகனங்கள் சிக்னல்களில் நிற்கும்போது, இதுபோன்ற நபர்களின் 'நச்சரிப்பு' தாங்க முடிவதில்லை. ஆய்வு செய்த போலீசார், இதற்கு தீர்வு காணும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு ரோட்டில் இடையூறாக யாரும் இருக்கக் கூடாது என்பதை, உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

போலீசார் தரப்பில் கூறியதாவது:நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவிநாசி ரோட்டில், பீளமேடு, ஹோப் காலேஜ், லட்சுமி மில்ஸ் சந்திப்பு, சிட்ரா சந்திப்பு, அண்ணா சிலை, திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார், ராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, ஜி.எச்., சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், வடமாநில நபர்கள் பல்வேறு வகையான பொருட்களை சிக்னல்களில் விற்பனை செய்கின்றனர். பிச்சை எடுக்கும் நபர்களாலும், சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு, எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்பதால், இதுபோன்ற நபர்களை, அகற்றி காப்பகங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.சாலை விபத்துக்களை குறைக்க, நகரில் விபத்து ஏற்படும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சிக்னல்களை ஒட்டியுள்ள பஸ் ஸ்டாப்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.- முத்தரசு மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X