ரன்னிமேடு ரயில் பாதையில் நிலச்சரிவை அகற்றும் பணி தீவிரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரன்னிமேடு ரயில் பாதையில் நிலச்சரிவை அகற்றும் பணி தீவிரம்

Added : நவ 28, 2019

குன்னுார் : குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், 12வது நாளாக நேற்று மண் மற்றும் பாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த கனமழையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், மண்சரிவு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 16ம்தேதி ஹில் குரோவ் - ஆடர்லி இடையே, 15வது கி.மீ., அருகே, ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்ததை வெடி வைத்து அகற்றினர். இதே இடத்தில் மீண்டும் பாறைகள் விழுந்தது. தொடர்ந்து, இங்கு, 10 நாட்கள் மேற்கொண்ட பணி நிறைவு பெற்றது. தொடர்ந்து தற்போது ரன்னிமேடு - குன்னுார் இடையில் ஏற்பட்ட மண்சரிவுகளை அகற்றும் பணி துவங்கியது.

குறிப்பாக, ரன்னிமேடு அருகே பாறைகளுடன் ஏற்பட்ட நிலச்சரிவை, 70க்கும் மேற்பட்ட ரயில்வே பொது பணித்துறை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை(29ம் தேதி) முழுமையாக மண் அகற்றி, தண்டவாள பாதிப்புகளை கண்டறிந்து சரி செய்து, 30ம் தேதியில் இருந்து ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.12 நாட்களாக, குன்னுார்-மேட்டுப்பாளையம் மலை ரயில் இயக்கப்படாத நிலையில், ஊட்டி-குன்னுார் இடையே இயங்கி வரும் மலை ரயிலில், வெளிநாட்டு பயணிகள் உட்பட சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X