இளையான்குடியில் தீயணைப்பு நிலையம்: எம்.எல்.ஏ., மீது புகார் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளையான்குடியில் தீயணைப்பு நிலையம்: எம்.எல்.ஏ., மீது புகார்

Added : நவ 28, 2019

திருப்புவனம் : திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை உள்ள நிலையில் அதை இளையான்குடிக்கு கொண்டு செல்ல மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன் முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2013 முதல் திருப்புவனம் தனி தாலுகாவாக இயங்குகிறது. அதற்கு முன்னரே இங்கு தீயணைப்பு நிலையம் துவக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இப்பகுதியில் நடக்கும் தீ விபத்துக்களுக்கு மீட்பு பணிக்காக மானாமதுரை, மதுரை அனுப்பானடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டும். இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி மடப்புரத்தில் தீயணைப்பு நிலையம் துவக்குவதென முடிவு செய்து, அதற்கான பூர்வாங்க பணிகள் நடக்கிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ., தீயணைப்பு நிலையத்தை இளையான்குடிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நாகராஜன் எம்.எல்.ஏ., கூறியதாவது: சட்டசபையில் திருப்புவனம், இளையான்குடி ஆகிய இரு இடங்களிலும் தீயணைப்பு நிலையம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளேன், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X