சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

Added : நவ 28, 2019
Share
Advertisement

இளையான்குடி : இளையான்குடியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானதால், மக்கள் 'டெங்கு' அச்சத்தில் தவிக்கின்றனர். இளையான்குடி சாலையூரை சேர்ந்த 7 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார்.கடந்த 10 நாட்களுக்கு முன் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.நேற்று முன்தினம் இச்சிறுமி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார். இதையடுத்து சாலையூர் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துப்புரவு பணிகளே நடக்காததால், தேங்கிய நீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் தீவிர காய்ச்சல் பரவுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X