பொது செய்தி

தமிழ்நாடு

போட்டித்தேர்வுகளில் சிறப்பு பாடங்கள்

Added : நவ 28, 2019
Advertisement

கோவை : அரசு போட்டித்தேர்வுகளின் விளம்பர அறிவிப்புகளில், சிறப்பு பிரிவு பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க கோரி தமிழக அரசுக்கும், உயர்கல்வித்துறையிடமும் பரிந்துரைக்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம், அரசு வேலைக்கு தகுதியற்ற, 100 படிப்புகள் என்ற அறிவிப்பு அடங்கிய அரசாணை, தமிழக அரசால் வெளியிடப்பட்டது.அரசாணை வெளியான பின்பும், இதில் படித்த மாணவர்களின் நிலை, இப்படிப்புகளை பல்கலை, கல்லுாரிகளில் நடத்தலாமா என்பன உள்ளிட்ட, எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.சம்பந்தப்பட்ட பல்கலைகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களை நடத்தி வருகிறது.

இப்படிப்புகளை படித்தால், அரசு போட்டித்தேர்வுகளை எழுத முடியாது என்ற நிலை வரும்போது, அப்படிப்புகளை நடத்த ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 'கோவை பாரதியார் பல்கலையில் 5 முதுநிலை படிப்புகள், 9 முதுநிலை படிப்புகளுக்கு இணையானது அல்ல' என, அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடப்பிரிவுகளில் படிக்கும், படித்து முடித்த மாணவர்கள் மாநில அரசு பணிகளில் பணிபுரிவது என்பது இயலாத காரியம்.இதுபோன்ற பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை கருதி மாநில அரசும், பல்கலை நிர்வாகங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது:உயர்கல்வி நிறுவனங்கள் அறிவியல் பிரிவின் கீழ், இயற்பியல், விலங்கியல் என்று பொதுவாக மட்டுமல்லாமல் மைக்ரோ பயாலஜி, நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி என சிறப்பு பிரிவுகளை வைத்துள்ளோம். போட்டித்தேர்வுகளின் போது, விலங்கியல், இயற்பியல் என்று பொதுவாக விளம்பரப்படுத்தாமல் அதன் கீழ், எந்த துறையின் நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவை என்று குறிப்பிட்டு விளம்பரப்படுத்த வேண்டும்.

அப்போது, இது போன்று சிறப்பு நிபுணத்துவ பாடங்களை பெற்ற மாணவர்களும் பயன்பெறுவர். இதுகுறித்து, அரசுக்கும், உயர்கல்வித்துறைக்கும் உடனடியாக பரிந்துரை சமர்ப்பிக்க, பல்கலை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். 'கோவை பாரதியார் பல்கலையில் 5 முதுநிலை படிப்புகள், 9 முதுநிலை படிப்புகளுக்கு இணையானது அல்ல' என, அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X