சிதம்பரம் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு?

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (6)
Advertisement
சிதம்பரம்,ஜாமின் மனு ,இன்று, தீர்ப்பு?

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவரும் காங். மூத்த தலைவர்களுள் ஒருவருமான சிதம்பரம் இந்த அனுமதியை அளித்தார்.

இதில் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ. கைது செய்தது. விசாரணைக்குப் பின் அவர் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஆனால் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 99 நாட்களாக சிறையில் உள்ள சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து டில்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 11 வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது. அவரது ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் 20ல் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அமலாக்கத்துறை சார்பில் இன்று வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன. அதன் பின் சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது நீதிபதிகள் இன்று தீர்ப்பளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிதம்பரத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா

காங். - எம்.பி. ராகுல் மற்றும் அவரது சகோதரியும் காங். பொது செயலருமான பிரியங்கா ஆகியோர் டில்லி திகார் சிறையில் சிதம்பரத்தை நேற்று சந்தித்து பேசினர். அவரது ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக நடந்த சந்திப்பு 50 நிமிடங்கள் நீடித்தது. அப்போது சிதம்பரத்தின் மகனும் காங். - எம்.பி.யுமான கார்த்தி உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கார்த்தி கூறியதாவது: சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றோடு 99 நாட்கள் ஆகிறது. அவர் விசாரணை கைதி இல்லை. அவரது காவல் இத்தனை நாட்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில் துளியும் நியாயம் இல்லை.உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார்.ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் என் தந்தையை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சி அவருக்கு முழு ஆதரவை அளித்து வருகிறது என்பதை இந்த சந்திப்பு உறுதிபட தெரிவிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
28-நவ-201909:21:13 IST Report Abuse
Indhuindian Hitting a century behind bars. Bravo
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
28-நவ-201908:55:11 IST Report Abuse
kalyanasundaram why court is spending their precious time in his case. They better utilize time on many cases pending since very long. But his lawyers earn good sum.
Rate this:
Share this comment
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
28-நவ-201907:08:48 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் மகாராஷ்டிரா நீதி மன்றதீர்ப்பு பாராட்டப்படும் அதே வேளையில் இவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்பின் அதே வாய் பராட்டுமா திட்டுமா? இல்லை ரெண்டுமே அவர்களுக்கு வாய்தானா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X