பந்தலுார் : பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பள்ளி கல்லுாரி மாணவரிகளிடம், விற்பனை செய்வதாகவும், தேவாலா டி.எஸ்.பி., விஜயகார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை தேவாலா பஜாரில் போலீசார், பான்பராக் விற்பனை செய்த உப்பட்டி பகுதியை சேர்ந்த முகமதுகோயா,62, என்பவரை கைது செய்தனர். கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, பான்பராக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Advertisement