அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சமூகவலைதளங்களில் 'போர்'

Added : நவ 28, 2019
Share
Advertisement
தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் வட்டாரத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ள, அனைத்து கட்சியினரும் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு, தங்கள் கட்சி பணிகளை விளம்பரம் செய்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு, டிச., 2ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 7 பேரூராட்சிகள், 10 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில்,

தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் வட்டாரத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ள, அனைத்து கட்சியினரும் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு, தங்கள் கட்சி பணிகளை விளம்பரம் செய்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு, டிச., 2ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 7 பேரூராட்சிகள், 10 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில், பதவிக்காக காத்திருந்த, மாஜிக்கள் மற்றும் புதியவர்கள் என, பலரும், தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து, தங்கள் பகுதியில், தாங்கள் மேற்கொண்ட மக்கள் பணிகள் குறித்து, பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டு, விளம்பரம் செய்து வருகின்றனர்.புதிய வார்டுகள் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர்.

அதேசமயம், எதிர்கட்சிகளின், குறைகளை குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூகவலைதளங்களில், அரசியல் கட்சியினரிடையே, வலைதள போர் ஏற்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்புக்குப் பின், இந்த போர் உச்சத்தை அடையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X