சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியில்லா 'மினி பொக்லைன்' பறிமுதல்

Added : நவ 28, 2019
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, தேயிலை தோட்டத்தில், அனுமதியின்றி சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட 'மினி பொக்லைன்' வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது;

அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நீலகிரியின் இயற்கையை பாதுகாக்க, கோர்ட் உத்தரவுபடி, விவசாய நிலங்களில், பொக்லைன் பயன்படுத்தி, சமன் செய்வது; கட்டுமான பணிகளை மேற்கொள்வது; பாறைகளை உடைப்பது; ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.அதிமுக்கியமான தேவைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் தடையில்லா சான்று பெற்ற பிறகுதான், இப்பணிகளை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், கோத்த கிரி காவிலோரை பகுதி யில், பொக்லைன் பயன்படுத்தி, தேயிலை தோட்டத்தை அழித்து, அங்கிருந்த, 10க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்களை வெட்டி, செங்குத்தான பகுதியில் சாலை அமைப்பதாக, வருவாய் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆர்.ஐ., பூவேந்திரன் தலைமையில், வி.ஏ.ஓ.,கள் பிரதீப்குமார் மற்றும் சத்யா உள்ளிட்ட வருவாய் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, அனுமதி பெறாமல் மினி பொக்லைன் மூலம், தேயிலை செடிகள் மற்றும் சில்வர் ஓக் மரங்களை அகற்றி, சாலை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பணியை நிறுத்திய அதிகாரிகள், வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே, வாகன உரிமையாளர் ஆனந்த் என்பவர் வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அலுவலர்களை பணி செய்ய விடாமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால், பாதுகாப்பு கருதி, வி.ஏ.ஓ., பிரதீப்குமார், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோத்தகிரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X