பொது செய்தி

தமிழ்நாடு

சிட்டி க்ரைம் செய்திகள்...

Added : நவ 28, 2019
Advertisement

குடிபோதையால் விபரீதம்சரவணம்பட்டி, ஜனதா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 52; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் குடிபோதையில் அப்பகுதியில் நடந்து வரும் சிமென்ட் சீட் வேலையை பார்க்க சென்றார். அப்போது மேலே இருந்து தவறி, கீழே விழுந்தவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.'பான்மசாலா' விற்றவர்கள் கைதுவெரைட்டிஹால் ரோடு, உக்கடம், ரத்தினபுரி போலீசார் நேற்று முன்தினம், தங்கள் பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனையிட்டனர். அச்சமயம் தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்ததாக, ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 'ஹான்ஸ்' உள்ளிட்ட 'பான்மசாலா' பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X