பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் 'பதில் சொல் அமெரிக்கா செல்'

Added : நவ 28, 2019
Advertisement

காரைக்குடி : தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களுக்கான 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற வினாடிவினா போட்டி காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் நடந்தது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ், 'பட்டம்' மாணவர் பதிப்பை வெளியிடு கிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு வினாடிவினா போட்டி நடத்தப்படுகிறது.அதன்படி காரைக்குடி தி லீடர்ஸ்மெட்ரிக் பள்ளியில் முதல்நிலை போட்டியான எழுத்துதேர்வு போட்டி நடந்தது. இதில், 16 மாணவர்களை ஆசிரியர் குழுவினர்தேர்வு செய்தனர். இவர்களை 'ஏ' முதல் 'எச்' வரை 8குழுக்களாக பிரித்தனர். இம்மாணவர்களுக்கு வினாடி வினா நடந்தது. ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, பவானி சங்கர் நடத்தினர்.

இதில் 'சி' பிரிவு மாணவிகள் எஸ்.ஓவியா, பி.பார்கவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்குபதக்கம், சான்றுகளை தி லீடர்ஸ் அகாடமி இயக்குனர் ஞானகுரு வழங்கினார்.வினாடி வினாவில் பங்கேற்றவர்கள்6 ஆம் வகுப்பு: அ.சாப்ரின், எம்.சித்தார்த். 7 ஆம் வகுப்பு: ஆர்.கிஷோர், எஸ்.அஸ்வின், எஸ்.சந்தோஷ்,8 ஆம் வகுப்பு: அ.தரணீஸ்வரன், கே.எஸ்.தேவதாரணி, எம்.நந்தனாநாச்சியார், ஐ.அப்சரா, எஸ்.கவுரிநாச்சியார்,9ஆம் வகுப்பு: எஸ்.அப்துல்பாசித், அ.பிரபாகரன், பி.தீபா, எஸ்.ஓவியா ஆனந்தி, பா.பார்கவி, எஸ்.மித்ராஹரிணி,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X