கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழைய மாடல் பைக் விற்ற ஏஜன்சிக்கு கோர்ட் உத்தரவு

Added : நவ 28, 2019
Share
Advertisement
கோவை : புதிய மாடல் பைக் என்று கூறி, பழைய மாடலை விற்றதால், இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. கோவை, அனுமந்தராயன் கோவில் வீதியை சேர்ந்த இளம்பரிதி, கணபதியிலுள்ள எம்.ஆர்.ஜி., மோட்டார் ஏஜன்சியில், 2015, மார்ச் 31ல், பேஷன் புரோ பைக் வாங்கினார்.ஆனால், 2014 வருட மாடல் பைக்கை, 2015 வருட மாடல் என்று கூறி விற்பனை செய்தனர்.ஆர்.சி.புத்தகத்தில், 2014 மாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய

கோவை : புதிய மாடல் பைக் என்று கூறி, பழைய மாடலை விற்றதால், இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

கோவை, அனுமந்தராயன் கோவில் வீதியை சேர்ந்த இளம்பரிதி, கணபதியிலுள்ள எம்.ஆர்.ஜி., மோட்டார் ஏஜன்சியில், 2015, மார்ச் 31ல், பேஷன் புரோ பைக் வாங்கினார்.ஆனால், 2014 வருட மாடல் பைக்கை, 2015 வருட மாடல் என்று கூறி விற்பனை செய்தனர்.ஆர்.சி.புத்தகத்தில், 2014 மாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய மாடல் என்று கூறி, அதிக தொகை பெற்றது பற்றி கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை.பாதிக்கப்பட்ட மனுதாரர், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிபதி பாலச்சந்திரன், பைக் ஏஜன்சி நிறுவனம் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டதால், இழப்பீடாக 10,000 ரூபாய், வழக்கு செலவு 3,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X