ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் துறைமுக வீதி சாலையில் இந்திய கடற்படை முகாம், மீன் இறக்கு தளம் உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் இந்திய கடற்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் மீன் ஏற்றும் லாரிகள், டூவீலரில் மீனவர்கள் செல்கின்றனர். ஆனால் இச்சாலை அருகில் உள்ள ஒட்டல், கடைகளில் இருந்து உணவு கழிவுகள், எச்சில் இலைகள், குப்பைகளை சாலை ஒரத்திலே கொட்டு கின்றனர்.
இக்கழிவு குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றிய சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டுவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இக்குப்பையில் பன்றி, கொசுக்கள் புகழிடமாக மாறி உள்ளதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குப்பை கொட்டும் ஒட்டல், கடைகள் மீது அபராதம் விதித்து, சுகாதாரம் பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.