பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் வேண்டி உண்ணாவிரத போராட்டம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
கடலாடி : கருங்குளம் சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்தனர். போராட்டம் கைவிடப்பட்டது.கடலாடி அருகே கருங்குளம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் கடந்த 1999ல் தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 100 வீடுகளுடன் ரேசன்கடை, சமுதாயக்கூடம், பொழுதுபோக்கு பூங்கா, 10 எண்ணிக்கையில் தெருக்களுக்கான தார்ச்சாலை

கடலாடி : கருங்குளம் சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்தனர். போராட்டம் கைவிடப்பட்டது.

கடலாடி அருகே கருங்குளம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் கடந்த 1999ல் தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 100 வீடுகளுடன் ரேசன்கடை, சமுதாயக்கூடம், பொழுதுபோக்கு பூங்கா, 10 எண்ணிக்கையில் தெருக்களுக்கான தார்ச்சாலை உள்ளிட்டவைகள் சமத்துவபுரம் தொடங்கிய காலம் முதல் முறையாக பராமரிப்பின்றி இருந்து வந்தது. சமத்துவபுரம் அமைந்த பகுதி தாழ்வாக உள்ளதால் மழைகாலங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுகிறது.

தொடர்ந்து சமத்துவபுரம் குடியிருப்புகள் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதியினர் நேற்று காலை 10:30 மணியளவில் உண்ணாவிரதம் இருப்பதற்கு முயற்சி மேற்கொண்டனர். இதையறிந்த கடலாடி பி.டி.ஓ., அன்புக்கண்ணன், கடலாடி எஸ்.ஐ., சரவணன்உள்ளிட்டோர் போராட்டக்குழுவினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X