பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பழங்குடியினர் பள்ளியில் திடீர் ஆய்வு

Added : நவ 28, 2019
Advertisement

பந்தலுார், : 'பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி, கொட்டட்டி அரசு பழங்குடியினர் பள்ளிகளின், காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார்.கார்குடி அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில், சமீபத்தில் நீதிபதி ஆய்வு செய்தார்.

அப்போது, பள்ளியில் மாணவர்கள் இரவில் தங்காதது தெரியவந்தது. இதனையடுத்து, நடந்த மாவட்ட அளவிலான கூட்டத்தில், 'பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில், மாணவர்கள் தங்க வைக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும். முறையாக செயல்படாத பள்ளிகளின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, மாவட்ட பழங்குடியினர் நலத்துறை நிர்வாகம் இது குறித்து கண்டுக்கொள்ளவில்லை. இதனால், பல பள்ளிகளிலும் இரவு உணவு முடித்துக்கொண்டு பழங்குடியின மாணவர்கள் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

இந்நிலையில், கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் கொட்டட்டி அரசு பழங்குடியினர் ஆரம்ப பள்ளி; அய்யன் கொல்லி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில், திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு, யாரும் இல்லாததும், அலுவலக பதிவேடுகள் பராமரிக்காமல் இருந்ததும், மாணவர்கள் மற்றும் காப்பாளர் இல்லாததும் தெரிய வந்தது. உடனே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறுகையில், 'பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X