பொது செய்தி

தமிழ்நாடு

நல்லா விளையாடுங்க...

Added : நவ 28, 2019
Advertisement

கோவை : ''கால்பந்து விளையாட்டில் சாதனை படைக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் தவறாது பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே ஓரளவு வெற்றி பெற முடியும்,'' என்றார் சந்தோஷ் டிராபி வீரர் ராகுல் வேணு.'ரிலையன்ஸ் பவுண்டேஷன் யூத் ஸ்போர்ட்ஸ்' சார்பில், சிறந்த இளம் வீரர்களை கண்டறியும் நோக்கில், இந்தியா முழுவதும், பல்வேறு பகுதிகளில் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.

மண்டல அளவிலான இறுதிப்போட்டி கணுவாய், யுவபாரதி சர்வதேச பள்ளியில் நடந்தது. கல்லுாரி மாணவர்களுக்கான பிரிவில், நேரு கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.இப்போட்டியில், சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான விருதினை, நேரு கலை அறிவியல் கல்லுாரியின் ராகுல் வேணு, தட்டி சென்றார். இத்தொடரில், எட்டு கோல் அடித்துள்ளார்.இவர் சந்தோஷ் டிராபி போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதுதான் ஸ்பெஷல்.எத்தனை வருடங்களாக புட்பால் விளையாடி வருகிறீர்கள்?என்னுடைய சொந்த ஊர் கேரள மாநிலம்.

நண்பர்கள் விளையாடுவதை கண்டு எனது, ஐந்து வயதில் கால்பந்து விளையாட்டை ஆரம்பித்தேன். 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். விளையாட்டு பல பாடங்களை கற்று தந்துள்ளது.கால்பந்து விளையாட்டின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்குமா?கால்பந்து விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை போன்ற பல நன்மைகள் கிடைக்கும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், கால்பந்து போட்டியில் பல வெற்றிகள் படைத்துள்ளேன். பள்ளி மற்றும் கல்லுாரிகளில் இலவசமாக படிக்க முடிந்தது.

தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றால், அரசு பணி வாய்ப்புகள் கிடைக்கும்.இந்திய கால்பந்து அணி எப்படி உள்ளது?தற்போதைய இந்திய அணி, வலுவாக தான் உள்ளது. உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் தோல்வி அடைந்தது, சற்று வருத்தமாக உள்ளது. இளைஞர்கள் பயிற்சி, உணவு பழக்கங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும்?கால்பந்து விளையாட்டில் சாதனை படைக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் தவறாது பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே, ஓரளவு வெற்றி பெற முடியும்.

பள்ளியில் படிக்கும் போது சரியான பாதையில் செல்கின்றனர். ஆனால், கல்லுாரியில் தவறான பாதையை தேர்வு செய்கின்றனர். இதனை தவிர்த்தால், வாழ்க்கையிலும், விளையாட்டிலும் சாதனை படைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X