பொது செய்தி

தமிழ்நாடு

பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு

Added : நவ 28, 2019
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை நகரம் என அழைக்கப்படும் கோத்தகிரியில், 80 சதவீதம் பரப்பளவில், தேயிலை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். நடப்பாண்டு, தேவையான மழை பெய்துள்ளதால், விவசாயிகள் தேயிலை தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரித்து வந்த நிலையில், தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.அதே நேரத்தில், தீபாவளி பண்டிகை நடந்த நாட்களில் இருந்து, படிப்படியாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 22 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது குறைந்து தற்போது, 12 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அறுவடைக்கு தயாரான பசுந்தேயிலையை பறிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X