திருவாடானை : திருவாடானை அருகே 70 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவத்தில் 3 திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மனைவி சாரதா 55. கருப்பையா வெளிநாட்டில் உள்ளார். நவ., 17 ந் தேதி காலை 10:00 மணிக்கு சாரதா கதவை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள மகளை பார்ப்பதற்காக சென்றார்.அன்று நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 70 பவுன் நகை, பதினைந்தாயிரம் ரூபாயை திருடி சென்றனர். திருவாடானை டி.எஸ்.பி. புகழேந்திகனேஷ், இன்ஸ்பெக்டர் கலாராணி, எஸ்.ஐ.நவநீதகிருஷ்ணன், தாஸ் மற்றும் போலீசார் திருடர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த சிங்கம்புனரியை சேர்ந்த முகமதுஅப்பாஸ் 32, மதுரையை சேர்ந்த ஹரி 19, யாசர் 19 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நகையை கைபற்றினர். கைது செய்யபட்ட மூன்று பேர் மீதும் பல திருட்டு வழக்குகள் உள்ளன.