சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை ரயிலில் பெண் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை

Added : நவ 28, 2019
Advertisement

கோவை : கோவை வந்த ரயில் பெட்டியின் கழிவறையில் பெண் சடலம் கைப்பற்றப்பட்டது.

மும்பையில் இருந்து நேற்று காலை, 7:30 மணிக்கு குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், கோவைக்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியபின், துப்புரவு ஊழியர்கள் பெட்டியை சுத்தம் செய்ய சென்றனர்.அப்போது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில், கழிவறை திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, ஒரு பெண் சடலமாக கிடந்தார்.அவரது பேக்கில் இருந்த அடையாள அட்டையின்படி, அவர் குஜராத்தை சேர்ந்த கதம்சரளா பென், 70 என்பது தெரிந்தது.

இவர் குன்னுாரில் வசிக்கும் தனது தங்கை சதாமி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். நள்ளிரவில் ரயிலில் கழிவறைக்கு சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.சடலத்தை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X