பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய ஹாக்கி போட்டியில் வெற்றி தென்மண்டல வீரர்களுக்கு பாராட்டு

Added : நவ 28, 2019
Advertisement

குன்னுார் : தேசிய படைக்கள ஹாக்கி போட்டியில், வெற்றி பெற்ற தென்மண்டல அணி வீரர்களுக்கு, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பாராட்டு விழா நடந்தது.

தேசிய அளவிலான, தளவாட தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை ஊழியர்களுக்கான ஹாக்கி போட்டி சென்னை ஆவடியில் நடந்தது. தெற்கு, மேற்கு, மத்திய, வடக்கு என நான்கு அணிகள் பங்கேற்றன.இறுதி போட்டியில், தென் மண்டல அணியின், முகமது அலி (ஐதராபாத்), ஜெகன் (சென்னை), சுரேஷ்குமார் (அருவங்காடு) ஆகியோர், 3 கோல்களும், மத்திய மண்டல அணியின் அமல் பாரா ஒரு கோலும் அடித்தனர்.

வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்ற தென் மண்டல அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களுக்கு, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், பாராட்டு விழா நடந்தது.இதில், வெடிமருந்து தொழிற்சாலை பொது மேலாளர் சிங் தலைமை வகித்து, தென்மண்டலஅணியில் பங்கேற்ற அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை சேர்ந்த சுரேஷ்குமார், திமோத்தி மெல்வின், கண்ணன், கருணாமூர்த்தி, சிவக்குமார், சந்தோஷ், கார்த்திக் ஆகியோருக்கு, பாராட்டு தெரிவித்தார்.

இதில், கடந்த 15, 16ம் தேதிகளில், சென்னையில், நடந்த தென்மண்டல தேர்வில், சிறந்த வீரர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றது; போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பொது மேலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. உதவி பொது மேலாளர் குமார், விளையாட்டு அதிகாரி பாலசுப்ரமணியம் உட்பட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X