பொது செய்தி

தமிழ்நாடு

பிட் செய்தி 

Added : நவ 28, 2019
Advertisement

அப்ப...அவ்வளவுதானா!ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், டவுன்ஹாலில் சாலையோரம் பெயின்ட் அடித்து, பாதசாரிகள் நடக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் வரை, டவுன்ஹாலில் இருந்து, உக்கடம் செல்லும் வழியில் உள்ள, பேருந்து நிலையத்தில், தள்ளுவண்டி கடைகள் இல்லை.

பழையபடி நேற்று, மீண்டும் தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. பாதசாரிகளுக்கான இடத்தில், இக்கடைகள் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கோவைப் புதுாரில் மீண்டும் யானை!கடந்த சில நாட்களாக கோவைப்புதுார் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரங்களில் மீண்டும் யானைகள் கூட்டம் வரத்துவங்கியுள்ளது. தோட்டங்களில் புகுந்து வாழை மற்றும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

மலை பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வனக்காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.போர்காலங்களில் கூடாரம்தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான, ஆண்டு இறுதி பயிற்சி முகாம், பீளமேடு பி.எஸ்.ஜி., கலை கல்லுாரியில் நடந்தது. இதில், மாணவர்களுக்கு போர் மற்றும் அவசர காலங்களில் கூடாரம் அமைப்பது எப்படி குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.ஆசிரியர்களுக்கு பயிற்சி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், 2021ல் நடக்கவுள்ள உலக திறன் போட்டிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் பயிற்சி, நேற்று டவுன்ஹால் மைக்கேல் பள்ளியில் நடந்தது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் லதா, திறன் போட்டிகளில் பங்கேற்க பெயர் பதிவு செய்ய, டிச., 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வக்கீல்கள் தீவிர வாக்கு சேகரிப்புவக்கீல் சங்க தேர்தல் நடைமுறையில், மாற்றம் கொண்டு வர, பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட வக்கீல் சங்கங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க தேர்தல் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்தது. ஆனால், பார் கவுன்சில் முடிவுக்கு முன்பே, தேர்தல் அறிவிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி வரும் 29ல், வாக்குப்பதிவு நடைபெறும் என, தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவோர், நீதிமன்ற வளாகத்தில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தவித்த இளம்பெண்கள்!அவினாசிலிங்கம் பல்கலை அருகே, ஒரு பெண் போலீஸ் மற்றும் மூன்று போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாமல் வருவோரையும், விதிமுறை மீறும் சரக்கு வாகனங்களையும் சிறை பிடிக்கின்றனர். நேற்று ஹெல்மெட் இன்றி ஸ்கூட்டரில் வந்த இளம் பெண்களை, நீண்ட நேரம் நிற்க வைத்தனர்.

நிற்கவும் முடியாமல், செல்லவும் முடியாமல், ரோட்டோரம் அமரவும் முடியாமல், இளம் பெண்கள் தவித்தனர். சாலையில் செல்பவர்கள் போலீசாரையும் இளம்பெண்களையும் மாறி, மாறி பார்த்து சென்றனர்.நீண்ட நேரத்துக்கு பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X