தமிழ்நாடு

ரோட்டில் புனரமைப்பு பணி; வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

Added : நவ 28, 2019
Advertisement

திருப்புவனம் : மதுரை- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முன் அறிவிப்பின்றியும், எச்சரிக்கை பலகை வைக்காமல் ரோட்டில் புனரமைப்பு பணிகள் நடப்பதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களுக்கு வடமாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளன. இதனால், வாகனங்கள் தடையின்றி செல்ல ஏதுவாக மத்திய சாலை போக்குவரத்து துறை மதுரை சிலைமானில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை, பரமக்குடி முதல் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இரு வழிச்சாலையாக மாற்றியுள்ளன.

மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ஒப்பந்ததாரர்கள் பாலத்தின் படிக்கட்டுகளுக்காக ஏணி அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை துவக்கும் ஒப்பந்ததாரர்கள், ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் விழிப்புணர்வு பலகைகள் வைப்பதில்லை.

குறிப்பாக நேற்று திருப்புவனம் அருகே மணலுார் பாலத்தில் ஏணி பொருத்தும் பணி எந்தவித தடுப்பு பலகை அமைக்காமல் நடந்தது. இதற்காக கீழடியில் இருந்து மணலுார் வரை வாகனங்களை ஒரே ரோட்டில் அனுமதித்தனர். இதனால், பெரும்பாலான வாகனங்கள் எதிரெதிரே அதிவேகமாக சென்றன. கீழடியில் மட்டுமே ஊழியர்கள் வேலை பார்ப்பதாக எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

மற்ற பகுதி ரோடுகளில் வைக்கவில்லை. குறிப்பாக மணலுாரில் எச்சரிக்கை பலகையின்றி ராமேஸ்வரம் நோக்கி சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், ரோடு புனரமைப்பு, கூடுதல் பணிகளை ஒப்பந்ததாரர்கள் உரிய எச்சரிக்கையுடன் மேற்கொள்கிறார்களா என கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X