பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் முகாம்: உள்ளூர் மக்கள் அச்சம்

Added : நவ 28, 2019
Advertisement

கூடலுார் : கூடலுார், நாடுகாணி அருகே குடியிருப்பை ஒட்டிய புல்வெளியில் முகாமிட்டுள்ள யானைகளால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் பகுதியில், பருவமழை குறைந்து, வெயில் மற்றும் குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை தொடர்ந்து, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய புல்வெளிகளில் முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.தற்போது, நாடுகாணி, பொன்வயல் குடியிருப்பை ஒட்டிய புல்வெளிகளில், மூன்று குட்டியுடன் ஏழு காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அதனை இவ்வழியாக பயணிக்கும் உள்ளூர் மக்கள், வெளி மாநில சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இரவில், இந்த யானைகள் புல்வெளிகளை ஒட்டிய பாண்டியார் டான்டீ, தேவாலா அட்டி, நாடுகாணி, பொன்னூர், பொன்வயல், கைககொல்லி பகுதிகளுக்குள் நுழைந்து, உணவுக்காக விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இதனால், உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க, அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதனையும் மீறி, யானை நுழைவது தெரிய வந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அவைகளை விரட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X