பொது செய்தி

தமிழ்நாடு

'டிமிக்கி' ஆசிரியர்களின் புதிய 'ரூட்' இது!

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019
Advertisement
 'டிமிக்கி'. ஆசிரியர்களின்.புதிய 'ரூட்'. இது!

கோவை : சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது, ஆன்லைனில் இருப்பதை, பிறர் கண்காணிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து, ஆசிரியர்களின் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பகிரப்படுகிறது.

இது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. பணிநேரத்தில் சமூக வலைதளங்களில், சில ஆசிரியர்கள் நேரத்தை செலவிடுவதாக, புகார் உள்ளது.இதனால், மொபைல் போன்களை, தலைமையாசிரியர் வசம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது, வருகைப்பதிவு முதல், பாடங்களுக்கான 'க்யூ.ஆர்., கோடு' பதிவிறக்குவது வரை அனைத்தும், ஸ்மார்ட் போன் மூலமாக, மேற்கொள்ள வேண்டியுள்ளது.பணி நோக்கத்திற்காக, மொபைல் போன்கள் பயன்படுத்தினாலும், ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டப்படுவதாக, சிலர் குமுறுகின்றனர்.இதற்கு, சில யோசனைகள் தருவதன் பேரில், வாட்ஸ்-ஆப் குழுக்களில், ஆசிரியர்கள் சிலர் பகிரும் தகவல்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் பர்சனலாக நேரத்தை செலவிட்டாலும், பிறர் கண்காணிக்காத வகையில், மொபைலில் 'செட்டிங்' மாற்றும் முறை குறித்து, பதிவிடப்பட்டு வருகிறது.கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், 'ஆசிரியர்களை பிறர் கண்காணிக்காமல் இருப்பதற்கு, 'வாட்ஸ் ஆப்' புரோபைலில், கடைசியாக பார்வையிட்ட நேரம் குறித்து, தகவலை மறைக்க அறிவுறுத்தப்படுகிறது.இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்கள், நேர்மையாக பணிபுரிவோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட் போன்களில் வருகைப்பதிவு மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதால் தான், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

வகுப்புக்கு ஒரு டேப்லெட் வினியோகித்து, பாடம் சார்ந்த தகவல்களுக்கு மட்டும், பயன்படுத்தி கொள்ளும் வசதி, ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்கள், நேர்மையாக பணிபுரிவோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட் போன்களில் வருகைப்பதிவு மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதால் தான், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. வகுப்புக்கு ஒரு டேப்லெட் வினியோகித்து, பாடம் சார்ந்த தகவல்களுக்கு மட்டும், பயன்படுத்தி கொள்ளும் வசதி, ஏற்படுத்தி தர வேண்டும்.- கல்வியாளர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X