பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா முன்பதிவு அலுவலகம் திறப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்

Added : நவ 28, 2019
Advertisement

கூடலுார் : மசினகுடியில், மூடப்பட்ட, சூழல் மேம்பாட்டு சுற்றுலா, முன் பதிவு அலுவலகம், மீண்டும் திறக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், வெளிவட்ட பகுதியான, மசினகுடியில் சூழல் மேம்பாட்டு சுற்றுலா அலுவலகம், தெப்பக்காடு சாலையில் திறந்து செயல்பட்டது.

அதில், சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து, தனியார் வாகனங்கள் மூலம் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கடந்த வாரம் அந்த அலுவலகம் மூடப்பட்டது.சுற்றுலா தொழிலை நம்பியிருந்த வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டனர். அலுவலகத்தை மீண்டும் திறப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இது தொடர்பாக, 19ல் மசினகுடியில், எம்.எல்.ஏ., திராவிடமணி, அரசு அதிகாரிகள், அப்பகுதியினர் பங்கேற்ற கூட்டம் நடந்து.அதில், 'மூடப்பட்ட சூழல் மேம்பாட்டு சுற்றுலா அலுவலகம் விரைவில் திறக்கப்படும்' என, வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தொடர்ந்து, கல்லட்டி சாலையோரம் வனத் துறைக்கு சொந்தமான இடத்தில், மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை முதுமலை வெளி வட்ட துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வனச்சரகர்கள் மாரியப்பன், காந்தன், முரளி, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'சுற்றுலா பயணிகளை வனத்துறை அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டும் ஓட்டுனர்கள் அழைத்து செல்ல வேண்டும். வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X