பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கா செல்ல மாணவர்கள் ஆயத்தம்!

Added : நவ 28, 2019
Advertisement

கோவை : தினமலர் மாணவர் பதிப்பான, பட்டம் இதழ் சார்பில் மெகா வினாடி வினா போட்டியின் காலிறுதி சுற்று நடந்தது.தினமலர், கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி. எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், இந்த மெகா வினாடி வினா போட்டி, நேற்று பிக்பஜார் ரோட்டில் உள்ள ஐ.சி.சி.,நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 150 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த நபீலா, அகல்யா ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பள்ளியின் தலைமையாசிரியை டெல்பின்மேரி பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

மற்ற மாணவிகளுக்கு உதவி தலைமையாசிரியை, ஜெஸிந்தாமேரி ஆசிரியைகள் ஜூலியட்மேரி, விஜயலட்சுமி, எலிசபத்டெய்சி, பென்சிபிரிசில்லா, ஞானசெல்வி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.கஸ்துாரி மெட்ரிக் பள்ளிகோவைபுதுார் பிரிவில் உள்ள கஸ்துாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 60 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.

இதில், 'ஏ' அணியைச் சேர்ந்த ஸ்ரீஹரி, பாத்திமா ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அப்பள்ளியின் முதல்வர் லட்சுமி பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.மற்ற மாணவர்களுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் சுதா, உதயசெல்வி, சுமதி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X