சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம்

Added : நவ 28, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் பூட்டிய வீடுகளை நோட்டமிடும் வடமாநில கொள்ளையர்கள் பூட்டிய வீடுகளில் அடையாள குறியிடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையில் குளிர்காலத்திற்கு தேவைப்படும் கம்பளி போர்வை விற்பதாக கூறி, வீடுகள் தோறும் போர்வை மற்றும் தண்ணீர் கேன்களுடன் வடமாநில இளைஞர்கள் சுற்றித்திரிகின்றனர். இது தவிர மின்வாரியம் சார்ந்த புகார்களை தீர்க்க வருவதாக கூறும் தனியார் ஊழியர்கள் சிலர் வீடுகள் தோறும் சென்று ரூ.30 கட்டணம் பெற்று, அந்த வீடுகளை நோட்டமிட்டு வருகின்றனர். இது போன்று வீடுகள் தோறும் செல்லும் கும்பல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, வீட்டு சுவரில் ஒரு வகை குறியீடுகளை கலர் சாக்பீஸ் மூலம் எழுதி வைத்து வருகின்றனர். குறிப்பாக சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு, ரோஸ் நகர், பனங்காடி ரோடு, 48 காலனி பகுதியில் உள்ள பெரிய வீடுகளில் இது போன்று கலர் சாக்பீசால் குறியிட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் கொள்ளையர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இதையடுத்து சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வீடுகளை பூட்டி வெளியூர் செல்வோர் கவனமுடன், வாட்ச்மேன்களை நியமித்து செல்ல வேண்டும். மேலும், வீட்டில் குடியிருப்பவர்களும் இரவில் நன்கு பூட்டி வைக்க வேண்டும். இரவில் அடையாளம் தெரியாத நபர்கள் அழைத்தால், வீட்டிற்கு வெளியே செல்லாமல், உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X