பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கையுந்து பந்து போட்டிக்கு காளையார்கோவில் பள்ளி தேர்வு

Added : நவ 28, 2019
Advertisement

சிவகங்கை : மாவட்ட கையுந்து பந்துபோட்டியில் காளையார்கோவில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று, மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி தேவகோட்டையில் நடந்தது. இதில், பங்கேற்ற காளையார்கோவில் ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி மாணவர்கள் 11 வயது பிரிவு செஸ் போட்டியில் மாணவி சஞ்சனாஸ்ரீ முதலிடம் பிடித்தார். 17 வயது பிரிவு குண்டு எறிதலில் ஜோஸ்எல்ஸி 3ம் இடம் பிடித்தார். வயது 14 க்கு உட்பட்டோர் குழு விளையாட்டில் கையுந்து பந்து விளையாட்டில் இப்பள்ளிமாணவர்கள் முதலிடம் பிடித்து, மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளி தாளாளர் கல்பனா, உடற்கல்வி ஆசிரியர் ஆல்வின் அந்தோணி, முத்துராக்கு உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X