சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இப்போ வருமோ...எப்போ வருமோ? அறிவிப்புடன் நின்ற அரசு திட்டங்கள் ... அதிருப்தியில் கூடலூர் மக்கள்

Added : நவ 28, 2019
Advertisement
 இப்போ வருமோ...எப்போ வருமோ? அறிவிப்புடன் நின்ற அரசு திட்டங்கள் ...  அதிருப்தியில் கூடலூர் மக்கள்

கூடலுார் : கூடலுாரில், 'பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு; மின் பகிர்மான கோட்டம் அமைக்கப்படும்,' என்ற அரசு திட்டங்கள் அறிவிப்புடன் நின்றதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுார் பகுதி, தமிழக- கேரள -- கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால், மூன்று மாநில சாலை போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ளது.ஆனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போதிய இடவசதி இல்லாததால், பஸ்களை மைசூர் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதனால், ஏற்படும் வாகன நெரிசலால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.இந்நிலையில், பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வசதியாக, பணிமனையின் பின்பகுதியில் உள்ள, காலி இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அங்கு, கூடலுார் எம்.எல்.ஏ., திராவிடமணி தொகுதி நிதி 50 லட்சம் ரூபாய்; எச்.ஏ.டி.பி., நிதி, 23 லட்சம் ரூபாய் செலவில், தடுப்பு சுவர் அமைக்கபட்டது. தொடர்ந்து, நிதியில்லை என, பணிகள் கிடப்பில் போடப்பட்டது.ஊட்டில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி, கூடலூர் பஸ் ஸ்டாண்ட் சீரமைக்க, 4.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இதுவரை பணிகள் துவங்கபடவில்லை.

இதனிடையே,'ஊட்டி மின் பகிர்மான கோட்டத்தை, இரண்டாகப் பிரித்து, கூடலூரை தலைமையிடமாக கொண்டு, 1.83 கோடி ரூபாய் செலவில் புதிய மின் பகிர்மான அமைக்கப்படும்,' என, 2018ல் மே மாதம் சட்டசபையில் நடந்த மின்துறை மானிய கோரிக்கையின் போது மின் துறை அமைச்சர் அறிவித்தார். இதற்கான, பணிகளும் துவக்கப்படவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், எதிர் கட்சி எம்.எல்.ஏ., தொகுதி என்பதால், திட்டங்களை கிடப்பில் போடப்பட்டதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளது. எனினும், 'அரசு இத்திட்டங்களை நிறைவேற்றி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்,' என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X