குன்னுார் : அருவங்காடு கிளை நுாலகத்தில், 52வது தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணை தலைவர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார்.டெம்ஸ் பள்ளி முதல்வர் தாரா ரமேஷ், வாசகர் வட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் ஆனந்தன், செந்தில், நூலகர் ஜெயஸ்ரீ ஆகியோர் வாழ்த்தி பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகளை ரங்கநாதன் தொகுத்து வழங்கினார். நுாலகர் உதயகுமார் நன்றி கூறினார். அரசியல் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.