பொது செய்தி

தமிழ்நாடு

2 பேருக்கு 'குண்டாஸ்' கலெக்டர் உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பூர் : திருப்பூரில், இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த வசந்தகுமார், 40 என்பவரை கொள்ளை வழக்கு தொடர்பாக, வேலம்பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு வழக்குகள் உள்ளது.இச்சூழலில், வசந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அவரை குண்டாசில் கைது செய்தனர். அதேபோல், சிவகங்கையை சேர்ந்த மணிமுத்து, 32 என்பவரை 'போக்சோ' பிரிவின் கீழ் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., திஷா மிட்டல், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து, அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X