பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.25 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Added : நவ 28, 2019
Advertisement

வெள்ளகோவில் : முத்தூரில்,196 பயனாளிகளுக்கு 24.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.விழாவுக்கு, காங்கயம் எம்.எல்.ஏ., தனியரசு முன்னிலை வகித்தார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், பெறப்பட்ட பல்வேறு மனுக்களை அந்தந்த துறை வாயிலாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, வேளாண்துறை, கால்நடைத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூகநலத்துறை, பொது சுகாதாரம், தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சி முகமை மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், வேளாண் இணை இயக்குனர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், காங்கயம் தாசில்தார் புனிதவதி உட்பட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X