பொது செய்தி

தமிழ்நாடு

'வினாடி - வினா'; வெளுத்து கட்டிய மாணவ, மாணவியர்

Added : நவ 28, 2019
Share
Advertisement
திருப்பூர் : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் பள்ளி மாணவருக்கான வினாடி- வினா போட்டி, திருப்பூர், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 'தினமலர், 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல் -- அமெரிக்கா செல்' எனும் வினாடி - வினா போட்டிகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில்,

திருப்பூர் : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் பள்ளி மாணவருக்கான வினாடி- வினா போட்டி, திருப்பூர், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

'தினமலர், 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல் -- அமெரிக்கா செல்' எனும் வினாடி - வினா போட்டிகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 100க்கு மேற்பட்ட பள்ளிகளில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பெறும் இரண்டு மாணவர்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர்.இறுதி போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு அமெரிக்காவில் உள்ள, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை, நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இதுவரை, 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந் துள்ளன.திருப்பூர், மங் கலம் ரோடு, கே.வி.ஆர்., நகரிலுள்ள கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று தேர்வில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, 300 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.இதில், சிறப்பாக பங்காற்றிய, 16 பேர், 'ஏ,பி,சி,டி,இ,எப், ஜி, எச்' என, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். 'ஏ' அணியில் - சுவேதா, அபிஸ்ரீ, 'பி' அணியில் - ஜெயஸ்ரீ, குருமணிகண்டன், 'சி' அணியில் - சத்தீஸ், தீக்ஷிதா, 'டி' அணியில் - பவித்ரா, தித்திகா, 'இ' அணியில் - கவின், சஞ்சய்முருகன், 'எப்' அணியில் - பார்த்தசாரதி, தரணீஷ், 'ஜி' அணியில் - ரெனிஷ்குமார், ராஜபாலன், 'எச்' அணியில் - சந்தியபிரியா, கிஷோர் ஆகியோர் இடம்பெற்றனர்.

இவ்வணிகளுக்கு மூன்று சுற்றுகளாக, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், 'சி'-'டி' அணிகள், 25 புள்ளிகளுடன் சமநிலை பெற, இவ்விரு அணிகளுக்கும் பிரத்யேக கேள்வி கேட்கப்பட்டது. இதில் சரியாக பதில் அளித்த, 'சி' அணியை சேர்ந்த சத்தீஸ், தீக்ஷிதா முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்றவருக்கு, பள்ளி முதல்வர் மாலதி, 'தினமலர்' கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். ஆசிரியர்கள் அபிநயா, சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் ரூபா, நுாலகர் குணாளன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X