பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு பதவியில் உள்ளவர்கள் உள்ளாட்சியிலும் 'சீட்' கேட்டு 'அடம்'

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பூர் : தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன், கோர்ட் வழிகாட்டுதலுடன் செய்து கொண்டே இருக்கிறது.

மற்றொருபுரம், ஒவ்வொரு கட்சியும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிதாக கோர்ட்டில் மனு செய்ய துவங்கிவிட்டன.உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உருவானால், அதையும் சமாளிக்க, ஆளும்கட்சி தயாராகிவிட்டது. மாவட்டம் தோறும், உள்ளாட்சி தேர்தலில் போட்டிடுவோரிடம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில், கட்சி நிர்வாகிகளுக்கு, உள்ளாட்சி தேர்தலில் 'சீட்'வழங்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு இழந்தவர்களுக்கு, கூட்டுறவு சங்க தேர்தலின் மூலம் பதவிகள் வழங்கப்பட்டன. கடந்த, 2016 தேர்தல் பாதியில் நின்றதால், பதவி கிடைக்காத ஆளும்கட்சியினர், கூட்டுறவு தேர்தலின் மூலம், மீண்டும் பதவிகளை பெற்றுள்ளனர்.மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அதன் மூலமாக அதிகாரம் மிகுந்த பதவிகளை பெறவும், முயற்சி எடுக்கின்றனர். பச்சை மையில் கையெழுத்திடும் பதவிகளில் உள்ளவர்கள், மீண்டும் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றவும், உயர்மட்ட நிர்வாகிகள் மூலம் காய்நகர்த்தி வருகின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால், அடிமட்ட தொண்டர்களை போலவே பார்வையாளர்களாக இருக்க வேண்டுமா என, மூன்றாம் கட்ட நிர்வாகிள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்தகட்ட நிர்வாகிகளுக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது, கூட்டுறவு சங்க பதவிகளில் உள்ள பலரும், உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றனர்.அப்படியெனில், ஒரு சிலர் மட்டுமே, இருவேறு பதவிகளை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மூன்றாம் கட்ட நிர்வாகிகள் தொண்டர்களாகவே இருக்க வேண்டிய நிலை உள்ளது. கூட்டுறவு சங்க பதவிகளில் உள்ளவர்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்காமல், தகுதியான மற்றொரு நபருக்கு வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X