திருப்பூர் : திருப்பூரிலுள்ள சென்சுரி பவுண்டேசன் சார்பில் நடந்த பள்ளி மாணவருக்கான கலை, இலக்கிய மற்றும் விளையாட்டு போட்டியில் எஸ்.கே.எல்., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.
தடகள போட்டியில், பேராட்சி செல்வி முதலிடமும், சாருஹாசினி, கிரிஷ் ராஜ்பர், முகில் முறையே இரண்டாமிடம் பிடித்தனர். யோகா போட்டியில் அனிதா முதலிடமும், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், 2ம் இடமும் வென்றனர். விளையாட்டில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பேராட்சி செல்வி பெற்றார்.கலை இலக்கிய போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி, ரிசப்தி தனிநபர் நடிப்பில் முதலிடமும், கனிஷ்கா, 2ம் இடமும், பேச்சு போட்டியில் வெங்கடேஸ்வரி, 2ம் இடமும் பெற்றனர்.
இசைக்கேற்ற நடனபோட்டியில், ரிசப்தி, ரிதன்யா முதல் இரண்டு இடங்கள் பிடித்தனர். ஓவிய போட்டியில் ரிசப்தி 2ம் இடம் வென்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ராதா, முதல்வர் மீனாட்சி, பள்ளி இயக்குனர் பாஸ்டன் ஆகியோர் பாராட்டினர்.