சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டடத்தில் தீ விபத்து

Added : நவ 28, 2019
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், நள்ளிரவில் போட்டோ பிரேம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமானது. திருப்பூர் கோர்ட் வீதியை சேர்ந்தவர் பாண்டிதுரை, 48. சாய்பாபா கோவில் அருகே போட்டோ பிரேம் கடை நடத்தி வருகிறார். தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடை உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது மாடியில், எட்டு அறைகளுடன் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் : திருப்பூரில், நள்ளிரவில் போட்டோ பிரேம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமானது.

திருப்பூர் கோர்ட் வீதியை சேர்ந்தவர் பாண்டிதுரை, 48. சாய்பாபா கோவில் அருகே போட்டோ பிரேம் கடை நடத்தி வருகிறார். தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடை உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது மாடியில், எட்டு அறைகளுடன் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் கடையை பூட்டி விட்டு சென்றார். கடை ஊழியரான ஹாஜி, 40 முதல் மாடியில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், திடீரென கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே ஹாஜி சத்தம் போட்டார். தகவலறிந்து சென்ற தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து காரணமாக, மாடியில் துாங்கி கொண்டிருந்த, 25க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க முடியாமல், பக்கவாட்டில் உள்ள கட்டடத்தில் ஏறி, கீழே இறங்கி தப்பித்தனர். வெகு நேரம் போராடி தீ அணைக் கப்பட்டது. தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X