சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'லேப்டாப்' கேட்டு பள்ளி முற்றுகை

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பூர் : திருப்பூரில், 'லேப்டாப்' வழங்க வலியுறுத்தி முன்னாள் மாணவியர், பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடப்பாண்டு மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்க உள்ளதாக முன்னாள் மாணவியருக்கு தகவல் தெரிந்தது.நேற்று மதியம், 30க்கும் மேற்பட்ட மாணவியர், 'லேப்டாப்' வழங்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளி ஆசிரியர்கள் மாணவியரிடம் பேச்சு நடத்தினர். தொடர்ந்து, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் மாணவியரிடம் பேச்சு நடத்தி, 'லேப்டாப்' வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக, ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X