சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் அத்துமீறல் மக்கள் 'தர்ம அடி'

Added : நவ 28, 2019
Share
Advertisement
பல்லடம் : பல்லடத்தில், சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு பொதுமக்கள் 'தர்மஅடி' கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் திருவாதவூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர் தினேஷ் பிரவீன்குமார், 34. பெயின்டர் வேலை பார்த்து வரும் இவர், ஒப்பந்த பணிக்காக, பல்லடத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.பல்லடம் - -உடுமலை ரோடு, புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே,

பல்லடம் : பல்லடத்தில், சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு பொதுமக்கள் 'தர்மஅடி' கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் திருவாதவூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர் தினேஷ் பிரவீன்குமார், 34. பெயின்டர் வேலை பார்த்து வரும் இவர், ஒப்பந்த பணிக்காக, பல்லடத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.பல்லடம் - -உடுமலை ரோடு, புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே, பெயின்டிங் பணிக்காக வந்த அவர், அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுமியிடம், அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார். \

அச்சிறுமி பெற்றோரை அழைத்ததும், தப்ப முயன்றுள்ளார். அதற்குள், அக்கம் பக்கத்தினர், வாலிபரை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.இரு கைகளையும் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாலிபர் மீது, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில், இதேபோன்று அத்துமீறல் தொடர்பான வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X