பொது செய்தி

தமிழ்நாடு

கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
சென்னை:கிண்டியில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பயன்பெறுமாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிண்டியில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வெள்ளிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு முகாம்நடத்தப்படுகிறது.அந்த வகையில், சென்னையில், இந்த

சென்னை:கிண்டியில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பயன்பெறுமாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிண்டியில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வெள்ளிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு முகாம்நடத்தப்படுகிறது.அந்த வகையில், சென்னையில், இந்த முகாம் கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில், 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.இதில், 8ம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரை பங்கேற்கலாம். 35 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் அவசியம்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X