பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனத்தில் 'சிசிடிவி' கட்டாயம்!

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பூர் : 'பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., சான்றிதழ் பெற வேண்டுமெனில், 'சிசிடிவி', ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டியது கட்டாயம்,' என, வட்டார போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி பஸ்களை கண்காணிக்க, 'சிசிடிவி' ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை தரப்பில் இருந்து அனைத்து ஆர்.டி. ஓ.,க்களும் விரிவான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.அதில், 'இனி பள்ளி பஸ்களில் 'சிசிடிவி' ஜி.பி.எஸ்., இருந்தால் மட்டுமே எப்.சி., தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவை இல்லாத பஸ்களில், பொருத்தி வரும்படி திருப்பி அனுப்ப வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.'10 சதவீதம் கூட இல்லை'திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் தாராபுரத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்படுகிறது.

அதிகபட்சமாக, 602 பள்ளி வாகனங்களை வடக்கு அலுவலகம் கண்காணிக்கிறது. தெற்கு, 400 பஸ், தாராபுரம் வட்டாரத்தில், 170 பஸ், உடுமலையில், 175 பஸ் என, 1,347 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை, 10 சதவீத பஸ்களில் கூட பொருத்தவில்லை.அடுத்த மாதம், 31ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து பள்ளி பஸ்களிலும் 'சிசிடிவி' ஜி.பி.எஸ்., பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X