திருப்பூர் : திருப்பூர் சிட்டியில், இளம் எஸ்.ஐ., கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் போன்ற தொழில் நகரில், நேரடி நியமன எஸ்.ஐ.,கள் அதிகமாக இருக்க வேண்டும்.
ஆனால், இரண்டு பேர் மட்டும் இருந்து வந்தனர். மற்றவர்கள் ஏட்டாக இருந்து பணி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள்.இச்சூழலில், நேரடி நியமன எஸ்.ஐ.,கள் திருப்பூருக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேரடி நியமன எஸ்.ஐகள் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்தது. ஸ்டேஷன் வாரியாக, நேரடி எஸ்.ஐ.,கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இளம் வயதை கொண்டவர்களாக இருப்பதால், களத்தில் இறங்கி அதிரடியாக வேலை பார்க்கும் சூழல் அமைந்துள்ளது.
இளம் வயது எஸ்.ஐ.,க்கள், களத்தில் இறங்கி ஆர்வத்துடன், தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை பார்க்கும் பட்சத்தில், ஸ்டேஷனுக்கு வரக் கூடிய பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும்; ஸ்டேஷனில் 'ஓ.பி.,' அடிக்கும் போலீசாருக்கும் கிடுக்கிப்பிடியாக இருக்கும்.