சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஆபீசில் 'தலைக்கு மேல் ஆபத்து' 

Added : நவ 28, 2019
Advertisement
 பி.எஸ்.என்.எல்., ஆபீசில்  'தலைக்கு மேல் ஆபத்து' 

பல்லடம் : பல்லடம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், தலைக்கு மேல் உள்ள ஆபத்தை சரிசெய்ய வேண்டும் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல்லடம், திருச்சி மெயின் ரோட்டில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளது. முன்வாசலில், மேற்பகுதியிலுள்ள கட்டுமான பலவீனமடைந்து, இடிந்து விழ காத்திருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து பொது மக்கள் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல்., அலுவலகத்துக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அலுவலக நுழைவு வாயிலின் மேற்கூரை, சிமென்ட் சிலாப் பெயர்ந்து, எப்போதும் விழலாம் என, காத்திருக்கிறது.

பருவ மழை பெய்து வரும் நிலையில், ஆபத்தின் தன்மை அதிகரித்துள்ளது எனவே, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உடனே அதனை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X