பொது செய்தி

தமிழ்நாடு

'காசா கிராண்டு பிராப்கேர்' துாய்மை விழிப்புணர்வு

Added : நவ 28, 2019
Advertisement
 'காசா கிராண்டு பிராப்கேர்' துாய்மை விழிப்புணர்வு

சென்னை:''மாணவர்களுக்கு, இளம் வயதிலேயே, துாய்மை குறித்து கற்றுத் தர வேண்டும்,'' என, 'காசா கிராண்டு பிராப்கேர்' முதுநிலை செயல் துணை தலைவர் வெங்கட்ராமன் கூறினார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே, துாய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, காசா கிராண்டு பிராப்கேர், நேற்று முன்தினம் நடத்தியது. உலக கழிப்பறை தினத்தையொட்டி, காசா கிராண்டு பிராப்கேர் தன்னார்வலர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள, 14 கழிப்பறைகளையும் சுத்தம் செய்தனர். பின், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிப்பது, கழிப்பறையை பயன்படுத்தும் வழிமுறை, கைகளை முறையாக கழுவும் முறை, மாணவியர் சானிட்டரி பேடுகளை பயன்படுத்தும் விதம் மற்றும் அகற்றும் முறை குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.மேலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'தனிநபர் துாய்மை - கழிப்பறை துாய்மை' என்ற தலைப்பில், கருத்தரங்கம் மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தன.நிகழ்ச்சியில், காசா கிராண்டு பிராப்கேர் முதுநிலை செயல் துணை தலைவர் வெங்கட்ராமன் பேசுகையில், ''மாணவர்களுக்கு, இளம் வயதிலேயே துாய்மை குறித்து கற்றுத்தர வேண்டும். துாய்மை குறித்து கற்று தருவதில், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.''இளம் வயதில், துாய்மை பற்றி மாணவர்கள் அறிவதால், தங்களின் வாழ்நாள் முழுவதும் துாய்மையுடன் இருப்பர். அடுத்தவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X