பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் காய்கறி விதை: 301 ஏக்கருக்கு வழங்க இலக்கு

Added : நவ 28, 2019
Advertisement

பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில், மானியத்தில் காய்கறி விதை பெற, 301 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய தோட்டக்கலை இயக்கம், கஜா வாழ்வாதார திட்டம் 2019-20ம் ஆண்டின் கீழ், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, சின்ன வெங்காயம், புடலை, பீர்க்கன், வெண்டை, சுரைக்காய், மற்றும் பாகற்காய் உள்ளிட்ட விதைகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெரினாபேகம் கூறியதாவது:பல்லடம் வட்டார விவசாயிள் பயன்பெறும் வகையிலும், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், மானிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக, பல்லடத்துக்கு, 301 ஏக்கர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, போட்டோ, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல் உள்ளிட்டவற்றுடன், பல்லடம் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X