சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மல்லீஸ்வரர் கோவிலுக்கு ரூ.2 கோடி பாக்கி

Added : நவ 28, 2019
Advertisement

பூக்கடை:பூக்கடை, சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது.

பூக்கடை, தேவராஜ முதலி தெருவில் உள்ள, சென்ன மல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில்கள், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இக்கோவில்கள், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இக்கோவிலுக்கு சொந்தமாக, 144 கடைகள் உள்ளன.இந்த கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள், நான்கு ஆண்டுகளாக, 3.24 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும், குறிப்பிட்ட கெடுவுக்குள் வாடகை செலுத்தாவிட்டால், காலி செய்ய வேண்டும் என, செயல் அலுவலர் ஜெயராமன், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.இதையடுத்து, 70 கடை உரிமையாளர்கள், 1.20 கோடி ரூபாய் வாடகை கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 70க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், 2 கோடி ரூபாய் வாடகை செலுத்தவில்லை. அவர்கள், 30க்கும் தேதிக்குள் செலுத்தவும், தவறினால், கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், கோவில் நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X