சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஊரெல்லாம் சுத்தம் பண்றோம்! ஆனா... எங்க ஏரியா?'

Added : நவ 28, 2019
Share
Advertisement
அனுப்பர்பாளையம் : மாநகராட்சி முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி, சுகாதார சீர்கேட்டுடன், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில், தினமும், 500 டன் குப்பை சேகரமாகிறது. முதலாம், நான்காம் மண்டலத்தில் சேகரமாகும் குப்பையை, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும், இரண்டு மற்றும் மூன்றாம் மண்டல பகுதியில் தனியார் நிறுவன
 'ஊரெல்லாம் சுத்தம் பண்றோம்! ஆனா... எங்க ஏரியா?'

அனுப்பர்பாளையம் : மாநகராட்சி முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி, சுகாதார சீர்கேட்டுடன், மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில், தினமும், 500 டன் குப்பை சேகரமாகிறது. முதலாம், நான்காம் மண்டலத்தில் சேகரமாகும் குப்பையை, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும், இரண்டு மற்றும் மூன்றாம் மண்டல பகுதியில் தனியார் நிறுவன தொழிலாளர்களும் அகற்றுகின்றனர்.தனியார் நிறுவனத்தின் கீழ், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், போயம்பாளையம், சமுதாய நலக்கூடம், கோவில் வழி உட்பட பல இடங்களில் தங்கியுள்ளனர்.


ஊரெல்லாம் சுத்தம் செய்யும் இவர்கள் தங்கியிருக்கும் பகுதி அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தார் பாய் மற்றும் பிளக்ஸ் பேனர் மூலம் கூடாரம் அமைத்துள்ளனர். மழை காலங்களில், சேறும், சகதியுமாக மாறுவதால், தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, போயம்பாளையம் - நஞ்சப்பா நகர் சமுதாயகூட வளாகத்தில் வசிக்கும் தொழிலாளர்கள், பிளக்ஸ் பேனர் மூலம் டெண்ட் அமைத்து, அதில் தங்கியுள்ளனர். அருகிலேயே, சாக்கடை கால்வாய் செல்வதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. அதிகரிக்கும் கொசுக்கள் தொல்லை ஒருபுறம் என்றால், சாக்கடை துர்நாற்றம் மறுபுறம் என, கடினமான சூழலில், வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இதனால், தொழிலாளர்களின் குழந்தைகள் அடிக்கடி உடல்நலமின்றி அவதிப்படுகின்றன.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'துப்புரவு பணியாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. அதனால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பி.எப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சட்ட சலுகைகள் உள்ளது.ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வும் கிடையாது. மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், ஓடிவரும் தொழிற்சங்கத்தினர், வெளி மாநிலத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை கண்டுகொள்வதில்லை,' என்றனர்.இது விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு, தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X