பொது செய்தி

தமிழ்நாடு

சேவூர் ரோட்டில் 'ரவுண்டானா' நெடுஞ்சாலை துறையினர் முடிவு

Added : நவ 28, 2019
Advertisement

அவிநாசி : அவிநாசி சேவூர் - கூட்டப்பள்ளி பிரிவு ரோட்டில், ரவுண்டானா அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

அவிநாசி சேவூர் ரோட்டில் பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து இருந்து, கூட்டப்பள்ளி, மடத்துப்பாளையம், நடுவச்சேரி உட்பட பல கிராமங்களுக்கு, ரோடு பிரிகிறது. முச்சந்திப்பில், மடத்துப்பாளையம் ரோட்டில் இருந்தும், சேவூர் ரோட்டில் இருந்தும், அதிவேகமாக வரும் வாகனங்கள், விபத்தை எதிர்கொள்கின்றன.இங்கு வேகத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து, முச்சந்திப்பு ரோடுகளிலும் மையத்தடுப்பு வைத்து,'ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட பலகை வைத்தனர்.

இருப்பினும், இருநாட்களுக்கு முன், சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி, அதிகாலையில், அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாடிழந்து, மையத்தடுப்பு கற்கள் மீது பலமாக மோதியது; இதில், 10 மீ., துாரத்துக்கு மையத்தடுப்பு கல் நகர்ந்தது.இதற்கிடையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், முச்சந்திப்பு ரோட்டில், ரவுண்டானா அமைத்து, அப்பகுதியை பொலிவுபடுத்த திட்டமிடப்பட்டு, வெள்ளோட்ட முயற்சியாக, ரோட்டின் மையப்பகுதியில் வட்ட வடிவில், மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'சேவூர் - மடத்துப்பாளையம் சந்திப்பு ரோட்டில், தினசரி ஏராளமான வாகனங்கள் செல்வதால், முக்கியத்துவம் பெற்ற ரோடாக மாறியிருக்கிறது. இங்கு வேகத்தை கட்டுப்படுத்துவதும், மிக கவனமுடன் வாகனங்களை இயக்குவதும் அவசியம். ரவுண்டானா அமைப்பதன் மூலம், வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படுவதுடன், பொறுமையாக வாகனங்களை இயக்குவதற்கான வழிவகை ஏற்படுத்தப்படும். அந்த இடம் பார்ப்பதற்கும், பொலிவுடன் இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X