வேகம் வேண்டாம்; விவேகம் வேண்டும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேகம் வேண்டாம்; விவேகம் வேண்டும்!

Added : நவ 28, 2019
 வேகம் வேண்டாம்; விவேகம் வேண்டும்!

அவிநாசி : 'டூ வீலரில் செல்லும் இளைஞர்கள் வேகத்துடன் வண்டியை ஓட்டாதீர்கள். விவேகத்துடன் பொறுமையாக செல்ல வேண்டும்,' என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அவிநாசி - திருப்பூர் ரோடு, அவிநாசி - சேவூர் ரோடு என, பிரதான ரோடுகளில், சமீப நாட்களாக சாலை விபத்து அதிகம் நேரிடுகிறது. போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை யினரின் கள ஆய்வு படி, அதிவேக பயணம் தான் வேகத்துக்கு, முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.இதனால், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில், அவிநாசி போக்குவரத்து போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில், ரோட்டில் தடுப்பு வைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.இந்த தடுப்பு, இரவிலும், நன்கு தெரியும் வகையில், 'ரிப்ளெக்டிங் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம், வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.அவர் கூறுகையில், 'வாகனங்களை மித வேகத்தில், கட்டுப்பாடுடன் ஓட்ட வேண்டும்; அவசர கதி பயணம் கூடாது. சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும்.

இரவு நேரங்களில் பயணிப்போர், துாக்க கலக்கத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டாம். வேகமாக வாகனத்தை ஓட்டுவதை விட, விவேகமாக ஓட்டுவதே, விபத்து தவிர்க்க ஒரே வழி,' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X